🏁 ஸ்பெயின் கார் பந்தயத்தில் 3-வது இடம்: அஜித் குமாருக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
சென்னை:
ஸ்பெயினில் நடந்த ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில், அஜித் குமாரின் அணி ஒட்டுமொத்தமாக 3-வது இடம் பிடித்து சாதனை படைத்தது. இதையடுத்து, துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியதாவது:
“பார்சிலோனாவில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அணி 3-வது இடம் பிடித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த வெற்றியின் மூலம் உலகளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும், தமிழகத்தையும் பெருமையடையச் செய்துள்ளார்.அஜித் குமாருக்கும், அவரது குழுவினருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்.”
மேலும், “இந்த சர்வதேச போட்டியின் போது கார், பந்தய உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலச்சினையை பயன்படுத்தியதற்காக, தமிழக அரசின் சார்பில் நன்றியைத் தெரிவிக்கிறேன். அவரது அணி இன்னும் பல வெற்றிகளைப் பெறட்டும்” என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments