Breaking News

தண்ணீர் கலந்த பெட்ரோல் விற்பனை-பிரேக் டவுன் ஆன வாகனங்கள் - வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்



காஞ்சிபுரம் 



காஞ்சிபுரம் மாநகருக்கு உட்பட்ட ஒலிமுகமது பேட்டையில் பகுதியில் செயல்பட்டு வரும் HP பெட்ரோலியத்தின் மனிஷா ஏஜென்சீஸில் நேற்று வாடிக்கையாளர்கள் பலரும் பெட்ரோல் நிரப்பி வந்த நிலையில் அதில் பலரின் வாகனங்களும் ஆங்காங்கே அடைத்தபடி நின்றிருக்கிறது.



இதில் காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை வரதப்பன் தெரு பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் 2  1/2 பெட்ரோல் போட்டு சென்ற நிலையில் அவரின் யமஹா வாகனமானது அடைத்தபடி நின்றிருக்கிறது.


இதனையெடுத்து அவர் அருகாமையில் உள்ள இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைக்கு வாகனத்தை எடுத்து சென்ற‌ போது வாகனத்தில் நிரப்பபட்டிருந்த பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பது உறுதியானது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கரன் வாகனத்தலிருந்து எடுக்கப்பட்ட பெட்ரோல் கேனுடன் பெட்ரோல் பங்க்-கிற்கு வந்து பல வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டு கொண்டிருந்த ஊழியர்களிடம் பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பது குறித்து கேட்க அசால்டாக அது ஒன்றும் இல்லை தண்ணீர் கலந்திருக்கும் என கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமாக வாடிக்கையாளர் பாஸ்கரன்‌ கையில் வைத்திருந்த பெட்ரோல் காட்டி ஊழியர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டிருக்கிறார்.


இதனையெடுத்து பங்க் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசிய நிலையில் அவரும் நாளை பேசிக்கொள்வோம் நானே தங்களது வீட்டிற்கு வருவதாக பேச பாஸ்கரன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வர மற்றொரு இங்கு பெட்ரோல் நிரப்பி ஆங்காங்கே நின்ற பலரும் பெட்ரோல் பங்க்-க்கு படையெடுத்தனர்.

இவர்கள் ஒருவருக்கொருவர் நடந்தவற்றை கூறி ஒருவருக்கொருவர் தனக்கும் இத்தகைய நிலை தான் ஆனது என மாறி மாறி கூறி அதிர்ச்சியுற்று ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு சிலர் புறப்பட்டு சென்றனர்.

இதில் பாஸ்கரன் மற்றும் ஒரு சிலர் மட்டுமே உரிமையாளர் நேரில் வந்து உரிய விளக்கமளிக்கப்பார், இதற்கு தீர்வு கொடுப்பார் என எண்ணியிருந்த நிலையில் அவர்கள் 2 மணிநேரமாக காத்திருந்தும் ஏமாற்றமே மிஞ்சின.


இதனையெடுத்து ஒருவருக்கு போடப்பட்ட பெட்ரோல் தொகைக்கான ரூபாயை கொடுத்து அனுப்பிய நிலையில் பாஸ்கரன்‌ தனக்கு உரிய நீதி கிடைக்க காத்திருந்து பின்னரே பெட்ரோல் போடப்பட்ட தொகைக்கான பில் கேட்டு அவற்றையும் ஊழியர்கள் கொடுக்க மறுத்த நிலையில் பின்பு வந்த மேனேஜர் மூலம் பில் போட்டு கொடுக்கப்பட்டது.

இதனையெடுத்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாக பாஸ்கரன் மகன் தெரிவித்தபடி புறப்பட்டு சென்றார்.

HP நிறுவனத்தை நம்பி போடப்பட்ட பெட்ரோலில் தண்ணீர் கலந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் வாடிக்கையாளர்கள் உடனடியாக HP நிறுவனம் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க்-ல் உரிய ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்:  E. ஜாபர் 

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  



No comments

Thank you for your comments