காஞ்சிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் ஆட்சியர் கலைச்செல்வி மோகன்
காஞ்சிபுரம், அக்.14:
காஞ்சிபுரம் சாலைத்தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு 24 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைத்தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. முகாமிற்கு காஞ்சிபுரம் மேயர் எம்.பாலசுப்பிரமணியன், ஆணையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்ததுடன் பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
முகாமில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதியப்படுவதையும்,மருத்துவ முகாமையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது பரிசீலனை செய்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சமூக நலத்துறை சார்பில் இரு பெண் குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு வைப்பீடு காப்பீடு அட்டைகள், மருத்துவத்துறை சார்பில் இருவருக்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அட்டைகள், 4 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் 2 பேருக்கு விசை உழுவை இயந்திரங்கள், நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் 5 பேருக்கு சொத்துவரி பெயர் மாற்ற சான்றிதழ் ஆகியன உட்பட மொத்தம் 24 பயனாளிகளுக்கு ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
📰 தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்

No comments
Thank you for your comments