Breaking News

காஞ்சிபுரத்தில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


காஞ்சிபுரம், அக்.11:

காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் செயல்பட்டு வரும் தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.இந்த அலுவலகத்தில் வாருங்கள் கற்றுக்கொள்ளுங்கள் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 


இத்திட்டத்தின்படி தீயணைப்பு நிலையத்துக்கு அருகில் உள்ள பொதுமக்களை அழைத்து அவர்களுக்கு தீ எவ்வாறு பரவுகிறது, தீ வேகமாக பரவும் போது கடைப்பிடிக்க வேண்டியது எப்படி,தீ விபத்துக்களை தடுப்பது எப்படி புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்காலங்களில் எவ்வாறு நம்மையும் பிறரையும் தற்காத்துக் கொள்வது என செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்களையும் ஒவ்வொன்றாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல் பாரி பொதுமக்களுக்கு விளக்கினார்.


No comments

Thank you for your comments