காஞ்சிபுரத்தில் தன்னார்வ ரத்ததான முகாம்
காஞ்சிபுரம், அக்.11:
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் விழுதுகள் தொண்டு நிறுவனம் சார்பில் சேக்குப்பேட்டை கவரத்தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தன்னார்வ ரத்ததான முகாம் நடைபெற்றது.
அமைப்பின் நிர்வாகி பாலாஜி தலைமை வகித்து ரத்ததானத்தின் அவசியம் குறித்து பேசினார். காஞ்சிபுரம் அன்னசத்திரம் அமைப்பின் நிர்வாகி மோகன் வரவேற்று பேசினார். காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் நினைவு மருத்துவமனையும், விழுதுகள் அமைப்பும் இணைந்து நடத்திய முகாமில் 24 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்தவர்களுக்கு விழுதுகள் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் வளர்ப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்த விழிப்புணர்வு புத்தகமும்,மருத்துவமனையின் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
முகாமில் சமூக சேவை அமைப்புகளின் நிர்வாகிகள், இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.முகாமை ஏற்பாடு செய்த விழுதுகள் அமைப்புக்கும் பாராட்டு சான்றிதழை அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர் ரம்யாமாலினி வழங்கினார்.
No comments
Thank you for your comments