Breaking News

அக்.24-ல் காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரம், அக்.15:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் அவரது அலுவலகத்தில் வரும் அக்.24 ஆம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற இருப்பதாக ஆட்சியர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

 


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் இம்மாதம் 24 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெறவுள்ளது. 

இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அரசின் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளனர். 

எனவே விவசாய பெருமக்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.


நுண்ணீர் பாசனம் திட்டத்தில் பயனடைவதற்கு குறு,சிறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதமும்,இதர விவசாயிகளுக்கு 75 சதவிகிதமும் மானியம் வழங்கப்படுகிறது.

எனவே விவசாயிகள் பயனடைவதற்கு சிட்டா,ஆதார் அட்டை, நீர் பரிசோதனை அறிக்கை, நிரை வரைபடம், விவசாயி புகைப்படம், அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் ஆட்சியரது செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

 


No comments

Thank you for your comments