எடப்பாடி பழனிச்சாமி கடிதத்திற்கு பதிலடி..!! டிடிவி தினகரன் பேட்டி – “கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினால் குடிமகனாக எனக்கு மகிழ்ச்சி தான்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் அ.ம.மு.க கட்சி சார்பில் நடைபெறவுள்ள செயல்வீரர் கூட்டத்திற்காக காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், செய்தியாளர்களை சந்தித்து பல முக்கியமான கருத்துகளை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
“அதிமுக 54 ஆம் ஆண்டு துவக்க விழாவில் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய கடிதம் பற்றி கேள்வி எழுப்பினீர்கள். யாரோ ஒருவர் எழுதிய கடிதத்திற்காக நேரத்தை வீணடிக்க தேவையில்லை.
அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டதாக முன்பு கூறினார்கள். இப்போது அனைத்து மகளிருக்கும் வழங்கப்படுவதாக கூறுவது தேர்தல் நேரம் என்பதால் தான். தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிதி சென்று சேர்வது மகிழ்ச்சி தான்,” என்றார்.
செய்தியாளர்கள் அவர் இதை வரவேற்கிறீர்களா என்று கேட்டபோது,
“கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றினால் குடிமகனாக எனக்கு மகிழ்ச்சி தான். எதிர்க்கட்சியாக இருப்பதற்காக எதையும் விமர்சிக்க நான் எடப்பாடி பழனிச்சாமி அல்ல,” என்று கூறினார்.
கரூர் துயர சம்பவம் குறித்து,
“உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடைபெறுகிறது. அதன் முடிவை காத்திருப்போம்,” என்றார்.
🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡
🛒 புதிய தகவல் இதோ 👇
திருமாவளவனின் வாகன சம்பவம் குறித்து அவர்,
“தலைவர்கள் தங்கள் தொண்டர்களை கட்டுப்படுத்தி நடந்து கொள்ள வேண்டும். ‘முறைத்த காரணத்தால் தட்டு தட்டப்பட்டது’ என்ற திருமாவளவன் போன்ற தலைவர்களின் கருத்து தவறான முன் உதாரணமாகிவிடும்,” என்று தெரிவித்தார்.
தங்கம் தென்னரசு கூறிய கடன் விவகாரத்தைப் பற்றி,
“முந்தைய ஆட்சியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவது தற்போதைய ஆட்சியின் கடமை. ஆனால் கடனை அதிகரிக்காமல், தேவைப்படும் இடங்களில் மட்டுமே செலவழிக்க வேண்டும். இலவச திட்டங்களை அளவுக்குள் வைத்தால் தான் மாநில வளர்ச்சி சாத்தியம்,” என்று கூறினார்.
அதுமட்டுமல்லாமல்,
“வருங்கால தேர்தல்களில் அனைத்து கட்சிகளும் இலவச திட்டங்களை வாரி வழங்காமல், தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும்,” என்றும் வலியுறுத்தினார்.
திருமாவளவனுக்கு ஆதரவாக விசிக தொண்டர்கள் வெளியிட்ட கருத்துகளைப் பற்றி அவர்,
“தலைவர்கள் தங்களது தொண்டர்களை கண்டிக்க வேண்டும். சமூக வலைதளங்களில் கலவரத்திற்கான கருத்துகளை பரப்பாமல் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்,” என்று அறிவுறுத்தினார்.
இறுதியாக NDA கூட்டணியில் உள்ள கட்சிகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு,
“அது NDA கூட்டணியில் உள்ளவர்களிடம் தான் கேட்க வேண்டும்,” என்று பதிலளித்தார்.
📰 காஞ்சிபுரம் மாவட்ட தலைமைச் செய்தியாளர்: E. ஜாபர்
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
No comments
Thank you for your comments