Breaking News

400 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம்...!

 



தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு பொருட்கள், மளிகை பொருட்கள், வேஷ்டி, சேலைகள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு டி.ஆர்.எஸ்.விஜயலட்சுமி, காவியா விமல் குமார், மோனிஷா ரிஷிவந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் 400கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந்தரம் வழங்கி சிறப்பித்தார்.



மேலும் தமிழகத்தில் கழக ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் தளபதி ஸ்டாலின் அவர்கள்  வழியில் பயணிப்போம் என்று தெரிவித்தார் மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை கூறினார்.நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வக்கீல் அசரப் அலி, மேட்டுப்பாளையம் நகர செயலாளர்கள் முனுசாமி, யூனுஸ், காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ், நிர்வாகிகள் மனோகரன், ராம் குட்டி மற்றும் மேட்டுப்பாளையம் நகர்மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .நிகழ்ச்சியின் இறுதியில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் நிர்வாகிகள் ஷேக், மற்றும் கவிதா ஆகியோர் டி.ஆர்.சண்முகசுந்தரம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

📝 செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455


No comments

Thank you for your comments