காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் – தமிழ்ச்செல்வம் தலைமையில் இரண்டாவது நாளாக நடைபெற்றது
காஞ்சிபுரம்:
மாவட்டச் செயலாளர் சுந்தர் உத்தரவின் பேரில், வரும் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகள் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பகுதி செயலாளர்கள் திலகர், வெங்கடேசன், தசரதன், சந்துரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் தொகுதி பொறுப்பாளர் ஜே. ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, தேர்தல் தயாரிப்புகள், வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பு மற்றும் மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
இதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகர துணைச் செயலாளர்கள் முத்துசெல்வம், நிர்மலா, பகுதி துணைச் செயலாளர் வழக்கறிஞர் வினோத்குமார் குடியரசு, மாநகர அவைத்தலைவர் செங்குட்டுவன், எல்லப்பன், கோவிந்தராஜு, மா.ம. சுரேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் இ. ஜாபர் எழில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் வட்டச் செயலாளர்கள் ஸ்ரீதர், ராஜரத்தினம், தனசேகரன், மோகன், சிவா, செந்தில், சங்கர், கமலக்கண்ணன், புவனகிரி சரவணன், சுகுமார், பிரசாந்த், தெய்வசிகாமணி ஆகிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பகுதி செயலாளர் சந்துரு நன்றியைத் தெரிவித்தார்.
  
No comments
Thank you for your comments