டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய என்டார்க் 150 சிசி ஹைபர் ஸ்போர்ட் ஸ்கூட்டர் அறிமுகம்..!
கோவை இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இந்தியாவின் வேகமான, ஹைப்பர் ஸ்போர்ட் ஸ்கூட்டரான டிவிஎஸ் என்டார்க் 150-ஐ கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. கோவையில் நடந்த அறிமுக விழாவில் டிவிஎஸ் மோட்டார்ஸ் கம்மூட்டர் ஸ்கூட்டர்ஸ் பிராண்ட் மேனேஜர் ரோனிகா, டிவிஎஸ் மோட்டார்ஸ் தமிழ்நாடு ஏரியா மேனேஜர் வினித், டிவிஎஸ் மோட்டார்ஸ் பிராண்ட் மேனேஜர் அபிநவ் ஷர்மா ஆகியோர் கலந்து கொண்டனர் புதிய டிவிஎஸ் என்டார்க் 150, அபாரமான ஆற்றல் கொண்ட 149.7சிசி ரேஸ்-டியூன் செய்யப்பட்ட எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
இந்த ஸ்கூட்டர் புதிய தலைமுறையைச் சேர்ந்த இரு சக்கர வாகன சாகச பிரியர்களை திருப்திப்படுத்தும் வகையில் அபாரமான செயல்திறன், கம்பீரமான ஸ்போர்ட்டி தோற்ற அழகியல் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றின் மிகச்சரியான கலவையாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன் சிறப்பு அறிமுக விலை (எக்ஸ்-ஷோரூம், இந்தியா முழுவதும்)ரூ. 109,400 ஆகும். இந்த புதிய டிவிஎஸ் என்டார்க் 150 எதிர்கால ஸ்கூட்டர்களில் முக்கியமான ஒன்றாக இருக்கும். லைவ் ட்ராக்கிங், வழிகாட்டும் நேவிகேஷன் வசதி மற்றும் ஓடிஏ புதுப்பிப்புகள் உள்ளிட்ட 50 பிளஸ் ஸ்மார்ட் அம்சங்களுடன் கூடிய உயர் துல்லிய டிஎப்டி கிளஸ்டர் இதன் வாகன பிரிவிலேயே மிகவும் மேம்பட்ட ஸ்கூட்டராக டிவிஎஸ் என்டார்க் 150-ஐ களமிறங்க செய்திருக்கின்றன.
அறிமுகம் குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஹெட் கம்மூட்டர் & இவி பிஸினெஸ், ஹெட் கார்பொரேட் ப்ராண்ட் & மீடியா மூத்த துணைத் அனிருத்தா ஹால்டார் கூறுகையில், டிவிஎஸ் என்டார்க் 150 தனித்துவமான வடிவமைப்பு, சிறந்த செயல்திறன் மற்றும் புதிய யுக தொழில்நுட்பம் ஆகியவற்றின் மிகச்சிறந்த வெளிப்பாடாக உள்ளது. புதிய டிவிஎஸ் என்டார்க் 150-ன் அறிமுகம், இன்றைய இளைய தலைமுறை யினரிடையே அதிகரித்து வரும் உயர் செயல்திறன் கொண்ட ஸ்கூட்டர்கள் வேண்டும் என்ற விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது என்றனர்.
📝 செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455


  
No comments
Thank you for your comments