ஆபத்தான நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் குடிநீர் எடுக்கும் பரிதாப நிலை – நல்லூர் வடகரை ஊராட்சி சம்பவம்
திட்டக்குடி:
அப்பகுதியில் உள்ள ஓடையின் மையப்பகுதியில் அரசு குடிநீர் விநியோகத்திற்காக மோட்டார் பம்ப் பொருத்தப்பட்டுள்ளது.
ஆனால், அந்த ஓடை பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததுடன், ஆக்கிரமிப்புகள் காரணமாக அதன் நீரோட்டம் குறைந்து, தற்போது முழுக் கொள்ளளவைத் தாண்டி நீர் வெளியேறி வருகிறது.
இந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மதிய உணவு இடைவேளையில் தங்களின் குடிநீர் வாட்டர் கேன்களில் தண்ணீர் நிரப்புவதற்காக அந்த ஓடையின் நடுவே சென்று, ஆபத்தை உணராமல் தண்ணீர் எடுத்து வருவது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பள்ளி மாணவர்கள் உயிர் ஆபத்தில் ஈடுபட வேண்டிய நிலையை ஏற்படுத்தியதற்காக கல்வித் துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, குடிநீர் வசதியை பள்ளிக்குள் ஏற்படுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments