Breaking News

கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசு உயிருடன் மீட்பு



காஞ்சிபுரம், அக்.28:

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காந்தி நகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை மேய்ச்சலுக்காக வந்த பசு திடீரென கழிவுநீர் தொட்டியில் விழுந்ததை தீயணைப்புத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் உயிருடன் மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள காந்தி நகரில் மேய்ச்சலுக்காக வந்த பசு ஒன்று அப்பகுதியில் சாலையோரம் இருந்த 10 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்தது.

வெளியேற முடியாமல் பசு அலறிக் கத்தியதை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். காஞ்சிபுரம் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சங்கர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து பசுவை கயிறு கட்டி மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


மிகவும் குறுகலான பள்ளத்தில் பசு சிக்கியிருந்ததால் பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரமாக போராடி பசுவை உயிருடன் மீட்டனர்.இதனை பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களை பாராட்டினர்.

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

No comments

Thank you for your comments