விருத்தாசலம் அருகே “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்
இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், லட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
முகாமில் 18 அரசு துறைகள் இணைந்து செயல்பட்டன. இதில் —
- ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
- எரிசக்தி துறை
- கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
- மாற்றுத் திறனாளிகள் நலத் துறை
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை
- பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறை
- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை
- கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளம் துறை
- வீட்டு வசதி மற்றும் நகர வளர்ச்சித் துறை
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை
- தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை
- சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை துறை
- வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை
- முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்
- போன்ற துறைகள் ஒருங்கிணைந்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றன.
நிகழ்ச்சியில் உதவி மின் பொறியாளர் இளஞ்செழியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வபாலன், மருத்துவர் சுகன்யா, விருத்தாசலம் காங்கிரஸ் கமிட்டி நகர தலைவர் ரஞ்சித், லெனின், வெற்றிவேல், ரமேஷ், ராஜசேகர், நடனம் பிள்ளை, தினத்தையாளன், தியாகராஜன், மற்றும் தோழமைக்கட்சி நிர்வாகிகள் செல்வகுமார், ஆனந்தபாபு, ஊராட்சி செயலாளர்கள் பிரகாஷ், வீரமணி, செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
No comments
Thank you for your comments