Breaking News

சுங்குவார்சத்திரம் மருந்து ஆலைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்!


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும் ஸ்ரீ சன் ஃபார்மா மருந்து உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து, அந்நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீ சன் ஃபார்மா ஆலையில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகளுக்கு அடுத்தடுத்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர்கள் உயிரிழந்ததாக புகார்கள் எழுந்தன. 

குழந்தைகளின் மரணத்திற்கு இந்த மருந்துதான் காரணம் என எழுந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தன.

இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை அன்று, உயிரிழப்பு ஏற்பட்ட மாநிலங்களின் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஸ்ரீ சன் ஃபார்மா மருந்து உற்பத்தி ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.


அப்போது, மருந்து தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் மாதிரிகள் (samples) கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, காஞ்சிபுரம் மண்டல மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி மணிமேகலை, ஸ்ரீ சன் ஃபார்மா நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, விளக்கம் கோரி நிறுவனத்தின் நுழைவாயிலில் நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.

No comments

Thank you for your comments