Breaking News

காஞ்சிபுரத்தில் விதிகளை மீறிய 178 வாகனங்கள்,ரூ.26 லட்சம் அபராதம் விதிப்பு


காஞ்சிபுரம், அக்.7:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் விதிகளை மீறியதாக 178 வாகனங்கள் கண்டறியப்பட்டு அவர்களின் உரிமையாளர்களிடமிருந்து மொத்தம் ரூ.25,93,271 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. 




காஞ்சிபுரம் மாவட்ட வட்டாரப் போக்குவரத்துத்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் மாவட்டத்தில் வாலாஜாபாத்,உத்தரமேரூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளின் சுற்றுப்புறங்களில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜ் தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் சிவராஜ் மேற்பார்வையிலும் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் அதிக பாரம் ஏற்றிச் சென்ற வாகனங்கள் 22,ஓட்டுநர் உரிமம் இல்லாதவை 47,தார்பாய் மூடாமல் சென்ற கனரக வாகனங்கள் 37,அதிகமான ஆட்களை ஏற்றிச் சென்றவை 12,காரில் இருக்கைப்பட்டை அணியாதவர்கள் 38,தலைக்கவசம் இல்லாமல் சென்றவர்கள் 12 பேர் உட்பட மொத்தம் 178 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இந்த வாகனங்களின் உரிமையாளர்களிடமிருந்து ஒரே மாதத்தில் ரூ.25,93,271 அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாகவும்,தொடர்ந்து வாகனச்சோதனை நடத்தப்படும் எனவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments