Breaking News

கோவிந்தவாடி கிராமத்தில் பூச்சி மருந்து தெளித்தல் விளக்க முகாம்

காஞ்சிபுரம், அக்.7:

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி கிராமத்தில் விவசாயிகளுக்கு புதிய பூச்சிக்கொல்லி குருணை பிகோட்டா மருந்து தெளித்தல் பற்றிய செயல்முறை விளக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் பேயர் பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் புதிய பூச்சிக்கொல்லி மருந்தான குருணை பிகோட்டா மூலம் ஏற்படும் நன்மைகள்,மகசூல் அதிகரிப்பு ஆகியன குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

நிறுவனத்தின் காஞ்சிபுரம் மண்டல மேலாளர் ரகு நெற்பயிரைத் தாக்கும் தண்டு துளைப்பான் தாக்குதல் மற்றும் பாதிப்புகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினார்.விவசாயிகளும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments