Breaking News

பிங்க் நிறத்தில் ஒளிர்ந்த ரேஸ் கோர்ஸ்..கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி...!

கோவை அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தாமஸ் பார்க்கில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, கேஎம்சிஹெச் மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கோவை நகரின் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கேஎம்சிஹெச் மார்பக சிகிச்சை மையத்தின் முதன்மை ஆலோசகர் டாக்டர் ரூபா, ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி  வைக்கப்பட்டிருந்த பேனர்களில் கையெழுத்திட்டு தங்களது ஆதரவினை தெரிவித்து சிறப்பித்தனர்.


அமைக்கப்பட்டிருக்கும் அகண்ட எல்இடி திரையுடன் கூடிய பிரம்மாண்ட மீடியா ட்ரீயும் அந்தப் பகுதி முழுவதும் பிங்க் நிறத்தில் ஒளிர ஆரம்பித்து பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. கேஎம்சிஹெச் மார்பக சிகிச்சை மையமானது அனைத்து விதமான சிகிச்சைகளையும் ஒரே கூரையின் கீழ் அளிக்கும் ஒரு முழுமையான சிகிச்சை மையமாக 2013-ம் ஆண்டுமுதல் செயல்பட்டுவருகிறது. சிறந்த நிபுணர்கள், அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப உதவியுடன் நோயாளிகளுக்கு ஆலோசனை, பரிசோதனை, சிகிச்சை ஆகிய அனைத்தும் உள்ளடக்கிய மருத்துவ சேவைகளை உலகத்தரத்துக்கு நிகராக வழங்கிவருகிறது.



மேலும் உலகின் மிகச்சிறந்த 3D மேமோகிராம், அதிநவீன அல்ட்ராசவுண்ட் சிஸ்டம், 3டி எம்ஆர்ஐ, மற்றும் தமிழகத்தில் முதன்முறையாகத் துவக்கப்பட்ட சிம்பியா ப்ரோ.ஸ்பெக்டா எஸ்பிஇடி /சிடிஸ்கேனர் ஆகியவற்றுடன் இம்மார்பக மையம் பலவிதமான தழும்பற்ற அறுவை சிகிச்சைகள் செய்திடும் திறன் பெற்றதாகும். உலகளவில் வருடா வருடம் 5 இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படு கின்றனர் .நோயாளிகள் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு முன் வந்தால் இந்த நோய்க்கு தகுந்த சிகிச்சைகள் அளித்து குணப்படுத்தி விடமுடியும். இந்நிகழ்வில்  கேஎம்சிஹெச் மருத்துவர்கள், ஊழியர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள், மற்றும் திரளான பொதுமக்கள்,ஆகியோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

📝 செய்தியாளர்: லீலா கிருஷ்ணன் – 📱99942 55455

No comments

Thank you for your comments