காஞ்சிபுரத்தில் சேவை அமைப்புகளுக்கு பாராட்டு விழா Appreciation ceremony for service organizations in Kanchipuram
காஞ்சிபுரம், அக்.5:
காஞ்சிபுரத்தில் தினசரி இலவசமாக ஏழைகளுக்கு உணவு வழங்கி வரும் காஞ்சி அன்னசத்திரம் அறக்கட்டளை சார்பில் காமாட்சி அம்மன் கோயில் சந்நிதி தெருவில் உள்ள எல்என்கே திருமண மண்டபத்தில் சேவை அமைப்புகளுக்கும், சேவை செய்யும் நிறுவனங்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு திருமண மண்டப உரிமையாளர் கிஷோர் குமார் தலைமை வகித்தார். பச்சையப்பாஸ் சில்க்ஸ் உரிமையாளர் பிரபு என்ற பச்சையப்பன், சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன், அருங்காட்சியக காப்பாட்சியர் சு.உமாசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அன்னசத்திரம் அறக்கட்டளையின் நிர்வாகி மோகன் வரவேற்று பேசினார்.
விழாவில் சென்னை எமிமா அறக்கட்டளை, திருத்தணி விடியல் அறக்கட்டளை, காஞ்சிபுரத்தை சேர்ந்த சமூக சேவை அமைப்புகளான பசுமை இந்தியா, மகிழகம், விதைகள், எழுதுக மற்றும் மனித நேயம் உள்ளிட்ட 36 சமூக சேவை அமைப்புகள், சக்ரா உணவகம்,சூரியா உணவகம், கோமதி சில்க்ஸ், பச்சையப்பன் சில்க்ஸ், மனோ ஆர்ட்ஸ் உட்பட 17 நிறுவனங்கள்,சமூக சேவகர்களான வரலாற்று ஆய்வாளர் ஜவஹர்பாபு, பத்மநாபன்,பார்த்தசாரதி,ரகுநாதன் உட்பட 24 பேர் ஆகியோருக்கு காஞ்சி அன்னசத்திரம் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை காஞ்சி அன்னசத்திரம் அமைப்பின் நிர்வாகி பன்னீர் செல்வம் உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
No comments
Thank you for your comments