Breaking News

28 ஆண்டுகளாக காலதாமதம் - வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்



28 ஆண்டுகளாக ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதிகளுக்கு பட்டா வழங்காமல் காலதாமதம் ஏற்படுத்தி வரும் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட வல்லபாக்கம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த 1996 ஆண்டு தனியார் நபரிடம் இருந்து நிலத்தை அபகரிக்கப்பட்டு அரசு கையகப்படுத்திய நிலையில் அந்த நிலத்தை அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைத்திருக்கப்பட்ட நிலையில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வசிக்கும் 176 ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்காமல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனை பலமுறை மாவட்ட ஆட்சியில் இடமும் உயர்த்துறை அதிகாரிகளிடமும் மனு அளிக்கும் எவ்விதை நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து இன்று காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி பதாகைகளை ஏந்தியவாறு  பேரணியாக ஒலிபெருக்கி மூலம் நடந்து வந்து வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

28 ஆண்டுகளுக்கு முன்பு தயார் நிலையில் பொதுமக்களுக்கு வழங்க இருக்கின்ற பட்டாவை நிறுத்தி வைத்து காலதாமதம் ஏற்படுத்தி வருவதை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



No comments

Thank you for your comments