வாலாஜாபாத்தில் மனைவியுடன் தகராறு - கணவர் தூக்கிட்டு தற்கொலை
காஞ்சிபுரம், அக்.25:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஆறுமுகப்பேட்டை ராஜகோபால் தெருவைச் சேர்ந்தவர் மணி(42) கட்டிடத் தொழிலாளியாக இருந்து வரும் இவரது முதல் மனைவி ரேவதி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ரேஷ்மா(9) என்ற பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் இவர் வேலூரைச் சேர்ந்த சுவேதா என்ற பெண்ணை 2 வதாக திருமணம் செய்து கொண்டார்.குழந்தையில்லாமல் இருந்து வந்த இத்தம்பதியரிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுவேதா தனது பெற்றோர் வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.
இதனால் விரக்தியான மணி வாலாஜாபாத்தில் உள்ள அவரது வீட்டில் உள்ள மின்விசிறியால் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சம்பவம் தொடர்பாக வாலாஜாபாத் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
🌿🎉 Great Indian Festival Deal
10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now
Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!
🛒 Buy Now on Amazon
🌿 மேஷம் முதல் மீனம் வரை | குரு அதிசார பெயர்ச்சி பலன்கள்
குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் ! | தவறாமல் கேளுங்கள் ⚡
💛 புதிய தகவல் இதோ👆


No comments
Thank you for your comments