அகில இந்திய கராத்தே போட்டி,காஞ்சிபுரம் காவலருக்கு வெண்கலப் பதக்கம்
காஞ்சிபுரம், அக்.19:
தமிழ்நாடு காவல்துறையில் ஆவடி சரகத்தில் காவலராக பணியாற்றி வருபவர் திலக்குமார்(32)இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இம்மாதம் 7 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்ற அகில இந்திய காவல்துறையினருக்கான ஜூடோ க்ளோஸ்டர் கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
காஞ்சிபுரம் பாரத் சிட்டோரியா கராத்தே அகாதெமி வீரரான இவர் வெண்கலப்பதக்கம் வென்று தமிழக காவல்துறைக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்துக்குகம் பெருமை சேர்த்துள்ளார்.
இவரை கராத்தே தலைமை பயிற்சியாளர் பாலா மற்றும் காவல்துறை அதிகாரிகளும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments