Breaking News

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நெல் ஈரப்பதம் 18 முதல் 22 வரை உள்ளது - மத்தியக்குழுவினர் ஆய்வில் தகவல் Paddy moisture content in Kanchipuram and Chengalpattu districts is between 18 and 22 - Central Committee's survey finds


காஞ்சிபுரம், அக்.27:

காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட மத்தியக்குழுவினர் நெல் ஈரப்பதம் 18 முதல் 22 வரை உள்ளதாக திங்கள்கிழமை தெரிவித்தனர்.


வடகிழக்குப் பருவமழை காரணமாக நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்தியக்குழுவினர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணிமங்கலம், புதுப்பாக்கம் உட்பட பல்வேறு நெல்கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் அருகே புதுப்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்தியக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் மத்திய உணவுத்துறை உதவி இயக்குநர் ப்ரீத்தி தலைமையில் தொழில் நுட்ப அலுவலர்கள் பிரியாபட்,அருண்பிரசாத், அனுபமா ஆகியோருடன் வேலூர் இந்திய உணவுக்கழக மேலாளர் கே.சி.உமா மகேசுவரி ஆகியோர் அடங்கிய மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

புதுப்பாக்கம் விவசாயி ரெங்கன் என்பவரது நெல்பயிர்கள் நெல்கொள்முதல் நிலையத்துக்கு வந்திருந்ததை அவர்கள் ஆய்வு செய்து ஈரப்பதத்தை நிர்ணயிக்கும் கருவியில் நெல்மணிகளைப் போட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பின்னர் மத்தியக் குழு அதிகாரிகள் கூறுகையில் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்தோம். பொதுவாக இப்பகுதிகளில் நெல்லின் ஈரப்பதமானது 18 முதல் 22 வரை உள்ளது.


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் மத்திய அரசு 17 சதவிகிதம் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்து வருகிறது. இதற்கு மேல் ஈரப்பதம் இருந்தால் நெல்லை கொள்முதல் செய்ய இயலாது.

தமிழக முதல்வரும்,விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் நெல்லின் ஈரப்பதத்தை கூட்டி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று ஈரப்பத உச்சவரம்பை உயர்த்த ஆய்வு செய்து வருகிறோம்.


இது குறித்து மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை அனுப்பி ஈரப்பதத்தை கூட்டுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.ஆய்வுக்குப் பின்னர் காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி மோகனையும் சந்தித்து பேசினார்கள்.

ஆய்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பா.முருகேசன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அருள்வனிதா,காஞ்சிபுரம் வட்டாட்சியர் ரபீக் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலரும் உடன் இருந்தனர்.

🎉 Great Indian Festival Deal

🌿🎉 Great Indian Festival Deal

10% Instant Discount* ✨ | Amazon's Choic |coupons |Free Delivery | Buy Save Money Now

Don't miss the best discounts and exclusive offers during the Great Indian Festival!

🛒 Buy Now on Amazon

  

No comments

Thank you for your comments