பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.16.80 லட்சம் மதிப்பிலான ஆடுகளை வழங்கினார் கலெக்டர் கலைச்செல்வி மோகன்
காஞ்சிபுரம், அக்.6:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் பழங்குடியின விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ஆடுகள் வழங்கப்பட்டன.
3 பெட்டை ஆடுகள், ஒரு கிடா ஆடு,தொடர்ந்து 6 மாதத்திற்கான தீவனம், கால்நடை வளர்ப்பு கூடாரம், தார்ப்பாய்கள் மற்றும் தண்ணீர் அருந்தும் தட்டுகள் ஆகியனவற்றை 42 பழங்குடியின விவசாயிகளுக்கு தலா ரூ.42 ஆயிரம் வீதம் மொத்தம் 16.80லட்சம் மதிப்பிலானவற்றை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தனலட்சுமி உட்பட அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments