Breaking News

⚡ இடி தாக்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு - அமைச்சர் சி.வெ. கணேசன் நேரில் ஆறுதல்




கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கழுதூர் கிராமத்தில், வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த பெண்கள் மீது மின்னல் தாக்கியதில் நான்கு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


Jivada Kumkumadi Tailam

🌿 மேஷம் முதல் மீனம் வரை | வார ராசி பலன்கள்

குரு உச்சம் பெறுவதால் பாக்கியம் பெருகும்! | தெய்வ அருள் உங்களை தழுவும் வாரம்! | தவறாமல் படிக்கவும் ⚡

🛒 புதிய தகவல் இதோ 👇


இந்த துயரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள் உடனடியாகச் சென்னையிலிருந்து விரைந்து வந்து, 



திட்டக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த கனிதா, சின்னபொண்ணு, பாரிஜாதம், ராஜேஸ்வரி ஆகியோரின் உடல்களைப் பார்வையிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


என் சொந்த ஊரில்...அமைச்சர் சி.வெ. கணேசன் உருக்கமான பேட்டி


பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர்,

முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த குடும்பங்களுக்குத் தலா ரூ.5 லட்சமும், ஈமச்சடங்குகளுக்காகத் தலா ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்படும்,” என்று அறிவித்தார்.

இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்,  போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உள்ளிட்டோர் அமைச்சருடன் இணைந்து பங்கேற்றனர்.

No comments

Thank you for your comments