Breaking News

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி | Youth attempts suicide by setting himself on fire in the District Collector's premises


காஞ்சிபுரம், செப்.29:

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கத்தின் முன்பாக திடீரென 59வயதுடைய ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.



காஞ்சிபுரம் அருகே விப்பேடு கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி}பாத்திமா தம்பதியரின் மகன் ஜான்போஸ்கோ(59) இவருக்கு சொந்தமான 55 சென்ட் இடத்தை அவரது உறவினர் ஒருவர் அபகரித்துக் கொண்டது தொடர்பாக காவல் துறையினரிடமும், வருவாய்த்துறையினரிடமும் கடந்த 2 ஆண்டுகளாக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.


இதனால் விரக்தியடைந்த ஜான்போஸ்கோ ஆட்சியர் அலுவலக மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கும் அரங்கத்தின் முன்பாக திடீரென உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைக்க முயன்றார்.

உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அதை தடுத்து அவரை மீட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அழைத்து சென்று குறைகளை கேட்டனர்.இதனால் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் சற்று பதற்றம் காணப்பட்டது.

No comments

Thank you for your comments