கோவூர் கூட்டுறவு கடன் சங்க லாபத்தொகை ரூ.19லட்சம் இணைப்பதிவாளரிடம் வழங்கல்
காஞ்சிபுரம், செப்.29:
காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரில் செயல்பட்டு வரும் கூட்டுறவு கடன் சங்கத்தின் கடந்த 2023-2024 ஆம் ஆண்டுக்கான லாபத்தொகை மொத்தம் ரூ.18,94,275.
இத்தொகை காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு வளர்ச்சி, ஆராய்ச்சி மற்றும் கல்வி நிதிக்காக கூட்டுறவுச் சங்க மண்டல இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ அவர்களிடம் கோவூர் சங்கத்தின் செயலாட்சியர் சி.ராஜசேகரன் வழங்கினார்.
நிகழ்வின் போது கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் பிரேம்குமார், மேலாளர் வி.முரளி,சங்க செயலாளர் எஸ்.ஜெயசங்கர் ஆகியோரும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments