Breaking News

காஞ்சிபுரம் குறை தீர்க்கும் கூட்டத்தில் 446 மனுக்கள் - உடனடி நடவடிக்கைக்கு ஆட்சியர் உத்தரவு


காஞ்சிபுரம்,செப்.29:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 446 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவற்றுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணுமாறு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். 


இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 446 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர் பரிந்துரைத்து அவற்றுக்கு உடனடியாக தீர்வு கண்டு மனுதார்களுக்கு தெரிவிக்குமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.



இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரா.மலர்விழி உட்பட அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments