விஸ்வகர்மா பாதுகாப்பு இளைஞர் கூட்டமைப்பு கண்டனக் கூட்டம் – 2026 தேர்தலில் தனியாக போட்டியிட தீர்மானம்
விருத்தாச்சலம் :
கூட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளாக சமூகத்திற்கான முக்கிய கோரிக்கைகள் அரசிடம் வலியுறுத்தப்பட்டு வந்துள்ளதாகவும், அதில் எங்கள் சமூகத்திற்கான 3% இடஒதுக்கீடு, மேல்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, சமூகத்தைச் சேர்ந்த குருமார்களுக்கு அரசு ஆலயங்களில் தர்மகர்த்தா பொறுப்பு, பொற்கொல்லர்களுக்கு அரசு வங்கிகளில் ‘அப்ரஸ்’ வேலைவாய்ப்பு வழங்குதல் போன்ற கோரிக்கைகள் இடம்பெற்றன.
மேலும், விஸ்வகர்மா ஜெயந்தி அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பலமுறை வைக்கப்பட்டிருந்தாலும், அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை என கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு முருகேசன் தலைமை வகிக்க, மாநிலத் தலைவர் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மாநிலச் செயலாளர் வெங்கடேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், குணசேகரன், வீரமலை, சீனிவாசன், குமரேசன் உள்ளிட்டோர் மற்றும் தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments