ஆற்பாக்கம் கிராமத்தில் 3 வீடுகளில் கொள்ளை முயற்சி – மாகரல் காவல்நிலைய எல்லைக்குள் தொடர் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்
- ஆற்பாக்கம் கிராமத்தில் 3 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
- வெள்ளி பொருட்களை எடுத்து சென்ற கொள்ளையர்
- மாகரல் காவல்நிலைய எல்லைக்குள் தொடரும் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்
மாகரல் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கொள்ளை நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் ஆற்பாக்கம் நடுத்தெருவில் வசிக்கும் பால் வியாபாரி செங்குட்டுவன் எதிர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் தனது மகன் வீட்டில் காலை 9 மணியளவில் வீடு திறந்திருந்ததை கண்டு சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடைத்துள்ளதை கண்டு மாகரல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறை ஆய்வு செய்த நிலையில் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்துள்ளது.
மேலும் அதே தெருவில் வசித்துவரும் பாலாஜி என்பவரது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டு உள்ளே சென்ற போது ஏமாற்றமே மிஞ்சு உள்ளது.
அதேபோல் பக்கத்து தெருவில் உள்ள ராஜாராம் வீட்டின் பூட்டையும் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.
கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் நெய்குப்பம் மற்றும் காவாந்தண்டலம் பகுதிகளில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் ஒரே நாளில் நான்கு வீடுகளில் கொள்ளையடிக்க சம்பவம் அப்பகுதி பொதுமக்களை மட்டுமல்லாது காவல்துறையும் அதிசயம் ஏற்படுத்தி உள்ளது.
No comments
Thank you for your comments