Breaking News

விருத்தாசலத்தில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி – விடுதலை சிறுத்தைகள் கட்சி


 விருத்தாசலம், 17 செப்டம்பர் 2025

கடலூர் மைய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், விருத்தாசலம் நீதிமன்றம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி, மதச்சார்பின்மை காக்கும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.


கடலூர் மைய மாவட்ட செயலாளர் பி.ஆர். நீதிவள்ளல் தலைமையில், கடைவீதியில் இருந்து பேரணியாகச் சென்ற கட்சி நிர்வாகிகள், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர். பின்னர், "மதச்சார்பின்மை காப்போம்" என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது.


நிகழ்வில் கலந்து கொண்டோர்

மண்டல துணை செயலாளர் ஐயாயிரம், நகர செயலாளர் முருகன், இஸ்லாமிய பேரவை மாநில துணைச் செயலாளர் அன்வர் பாட்ஷா, ஒன்றிய செயலாளர் சுப்புஜோதி, ஒன்றிய பொருளாளர் எழில்வன்சிறப்பு, நகர துணை செயலாளர் வயலூர் இளங்கோவன், முன்னாள் மாவட்ட செயலாளர் பெருஞ்சித்திரன், சத்தியவாடி பாஸ்கர், துரைமுருகன், அருள்சுகன், சுரேஷ், வழக்கறிஞர் தன்ராஜ், மேட்டு காலனி வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், ஒன்றிய துணை செயலாளர் தென்றல், ராஜேந்திரபட்டினம் விஜய், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ராம்குமார், கண்ணன், வீரமணி, சதீஷ், பாலு, தனசேகர், ராகுல், ரமணா, ஜூட் மணி, அகத்தியன்பாலா, நாச்சியார்பேட்டை பாலு, வீரத்தமிழன், சந்தோஷ், சிந்தனைச்செல்வன், சசிக்குமார், அண்ணாதுரை, மணிகண்டன், அய்யம்பெருமாள், ஒன்றிய துணை செயலாளர் கவியரசன், அறிவுக்கரசு, ஒன்றிய பொருளாளர் ராஜி, விமல்ராஜ், முற்போக்கு மாணவர் கழக பொறுப்பாளர்கள் ரஞ்சித், பிரேம்குமார் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



பேட்டி

நீதிவள்ளல்
கடலூர் மைய மாவட்ட செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி


📌 செய்தியாளர்: R. காமராஜ் – 📞 9080215691
📌 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் – 📞 8072117545


No comments

Thank you for your comments