Breaking News

காஞ்சிபுரத்தில் பெரியார் சிலைக்கு விஜய் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை


 காஞ்சிபுரம், 17 செப்டம்பர் 2025

தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களின் 147வது பிறந்த நாள் இன்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தனது கட்சி நிர்வாகிகளுக்கு பெரியார் சிலைகளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.


அதன்படி, காஞ்சிபுரம் சங்கரமடம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலைக்கு, 300-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பேரணியாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, "கொள்கை தலைவர் பெரியாருக்கு வீரவணக்கம்" என முழக்கங்களை எழுப்பினர்.

நிர்வாகி தென்னரசு பேட்டி

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தென்னரசு,

  • "திமுக, அதிமுக கூட்டத்தை பாருங்கள், எங்கள் கூட்டத்தை பாருங்கள். எங்களுக்கு கொள்கை இல்லை என்று  விமர்சித்தவர்களுக்கு இதுவே பதில்," என்று சவால் விட்டார்.
  • மேலும், "குழந்தைகளை எங்கள் கட்சியில் சேர்ப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் உண்மையில் வாக்காளர் அட்டை கொண்டவர்கள் மட்டுமே எங்கள் கட்சியில் உறுப்பினராக சேர முடியும்," எனவும் தெளிவுபடுத்தினார்.

No comments

Thank you for your comments