விருத்தாச்சலம் தொட்டிக்குப்பம் – “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் MLA ராதாகிருஷ்ணன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
விருத்தாசலம், செப்.3:
இந்த முகாமில் விருத்தாசலம் வட்டாட்சியர் அரவிந்தன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீதாபதி முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, எம்.பட்டி, எருமனூர், தொட்டிக்குப்பம் ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.
தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பெட்டகம், புதிய மின் இணைப்புக்கான ஆணை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!
இந்த முகாமில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, எரிசக்தி, மாற்றுத்திறனாளிகள் நலம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், கூட்டுறவுத்துறை உள்ளிட்ட 15 அரசு துறையினரும் பங்கேற்றனர்.
ஊராட்சிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயனடைந்தனர்.
No comments
Thank you for your comments