எஸ்எஸ்விஎம் நிறுவனங்கள் “ஸ்டுடன்ட்பிரனூர் அவார்ட்ஸ் 2025” வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன !
எஸ்எஸ்விஎம் நிறுவனங்கள் நடத்தி வரும் நான்காவது Transforming India Conclave (TIC) நிகழ்வில், “ஸ்டுடன்ட்பிரனூர் அவார்ட்ஸ் 2025” வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மாணவர்களின் தொழில்முனைவு சிந்தனையை ஊக்குவித்து, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் புதுமையான திட்டங்களை பாராட்டுவதே இந்த விருதுகளின் நோக்கமாகும்.இந்த விருதுகள், எஸ்எஸ்விஎம் நிறுவனங்களிலும், இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு பள்ளிகளிலும் இருந்து பங்கேற்ற தைரியமான மாணவர்கள் தங்கள் யோசனைகளை சமூகத்திற்கு பயனளிக்கும் முயற்சிகளாக மாற்றிய விதத்தை வெளிச்சமிட்டன. தொழில் நுட்ப நிபுணர்களின் வழிகாட்டுதலுடன், இம்மாணவர்கள் தங்கள் கனவுகளை நனவாக்கும் திறனை பெற்றுள்ளனர்.வரவேற்புரையில், எஸ்எஸ்விஎம் நிறுவனங்களின் கல்வி இயக்குநர் ஸ்ரீஷா மோகன்தாஸ் “செயற்கை நுண்ணறிவு மனிதர்களை மாற்றுமா என்பதல்ல உண்மையான சவால்; மனிதகமும் செயற்கை நுண்ணறிவும் ஒன்றிணைந்து எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்கும் என்பதே முக்கியம்” எனக் குறிப்பிட்டார். அவர், செயற்கை நுண்ணறிவை “மிதிவண்டியின் உதவி சக்கரம்” போல எடுத்துக்காட்டி, அது ஒரு கற்றல் ஆதாரமாக இருந்தாலும், அதை மீறி மனித திறமையும் ஞானமும் முன்னிலையாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டில் பல துறைகளில் செயற்கை நுண்ணறிவின் பங்கை பற்றி சிந்தனைத் தூண்டும் அமர்வுகள் நடைபெற்றன.ஷரண் ஹெக்டே (தொழில்முனைவோர், உள்ளடக்க உருவாக்குநர் & Founder & CEO, 1% Club) – “Beyond Numbers: Why Financial Wisdom Still Needs a Human Voice” என்ற உரையில், நிதி துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு இருந்தாலும், மனித தீர்மானமும் கட்டுப்பாடும் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
டாக்டர் மணிமேகலை மோகன், நிறுவனர் மற்றும் மேலாண்மை அறங்காவலர், எஸ்எஸ்விஎம் நிறுவனங்கள், மற்றும் ஸ்ரீஷா மோகன்தாஸ் – “Mother, Daughter & Machine: Reimagining Education Together” என்ற அமர்வில், கல்வியில் ஆசிரியரின் அன்பு, பரிவு மற்றும் மனித உறவினை செயற்கை நுண்ணறிவு ஒருபோதும் மாற்ற முடியாது எனக் கூறினர்.டாக்டர் ராஜா சபாபதி, தலைவர், பிளாஸ்டிக் சர்ஜரி துறை, கங்கா மருத்துவமனை – “Touch, Trust & Technology: What AI Can’t Replace in Patient Care” என்ற உரையில்,சுகாதாரத்தில் அணுகல் மற்றும் முன்கூட்டிய கண்டறிதலில் செயற்கை நுண்ணறிவு பெரிதும் உதவினாலும், நோயாளி பராமரிப்பில் மனித பரிவு மற்றும் நம்பிக்கை மாற்ற முடியாதவை என்றார்.ஜிபு எலியாஸ், செயற்கை நுண்ணறிவு நெறிமுறை ஆய்வாளர் & சமூக செயற்பாட்டாளர் – “Building AI for India: Culture, Context & Responsibility in Innovation” என்ற உரையில், இந்தியாவின் பண்பாடு, மதிப்புகள் மற்றும் ஒழுக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் மட்டுமே செயற்கை நுண்ணறிவு பொறுப்பான புதுமையை முன்னெடுக்க முடியும் எனக் கூறினார்.நிகழ்வின் சிறப்புப் பகுதியாக, தேசிய அளவிலான ஸ்டுடன்ட்பிரனூர் அவார்ட்ஸ் 2025 வெற்றியாளர்களுக்கு டாக்டர் மணிமேகலை மோகன், டாக்டர் ராஜா சபாபதி, ஸ்ரீஷா மோகன்தாஸ், நிதின் ஜெய் மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்:
முதல் பரிசு (₹75,000): ரோனக் கோல்சா, அர்னவ் சராஃப், நைதிக் அகர்வாலா – சின்மயா இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல் ஸ்கூல் இரண்டாம் பரிசு (₹50,000): தயா விஷ்ணு குமாரன் – ஸ்ரீ ரமண அகாடமி சீனியர் செக்கண்டரி CBSE ஸ்கூல் மூன்றாம் பரிசு (₹25,000): டி.எஸ். சர்வேஷ் ஆதித்யா, ஹெச். சிவ் சர்வேஷ், சஷ்வத் ஆர்.எஸ் – BVM Global இந்த விருதுகள், இந்தியா முழுவதும் இருந்து பெரும் அளவில் மாணவர் பங்கேற்பை பெற்றதுடன், எதிர்கால மாற்றங்களை உருவாக்கும் இளம் தலைவர்களை உருவாக்க எஸ்எஸ்விஎம் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தின. மாணவர்களை எல்லைகளை மீறிச் சிந்திக்க ஊக்குவித்து, இந்தியாவின் தலைவர்கள் மற்றும் புதுமையாளர்களை உருவாக்கும் பயணத்தை எஸ்எஸ்விஎம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
No comments
Thank you for your comments