Breaking News

எல்லோருக்கும் எல்லாம் திட்டத்தின் கீழ்,உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்...!

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 80க்குட்பட்ட பகுதியில் "எல்லோருக்கும் எல்லாம்" திட்டத்தின் கீழ், "உங்களுடன் ஸ்டாலின் முகாம்"கெம்பட்டி  காலனி மாநகராட்சி சமுதாய நல கூடத்தில்  நடைபெற்றது. 

தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், 13க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் மற்றும் 43க்கும் மேற்பட்ட அரசுசாரா சேவைகள், பொதுமக்களுக்கு நேரில் வழங்கப்பட்டு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள், மருத்துவ முகாம்கள் போன்ற பல சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் 80வது வார்டு மாமன்ற உறுப்பினர் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெவ்வன் முன்னிலை வகித்தார்.கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex MLA பங்கேற்று முகாமில் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். 

👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!


அதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன், முகாமை பார்வையிட்டு அரசு அதிகாரிகளிடம் முகாம் பற்றிய ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்து சிறப்பாக பணிகள் நடைபெற வேண்டும்  என்று  ஆலோசனை வழங்கினார்.



இந்நிகழ்வில் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, தெற்கு சட்டமன்ற தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், மாநகராட்சி துணை ஆணையர் செந்தில் குமரன், உதவி செயற் பொறியாளர் ஹேமலதா, உதவி நகர திட்ட அலுவலர் கோவிந்த பிரபாகரன்,மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் தனபாலன், 

திமுக மாநில தீர்மானக்குழு இணை செயலாளர் பி.நாச்சிமுத்து,கெம்பட்டி பகுதி  பொறுப்பாளர் என்.ஜே.முருகேசன் வட்டக்கழகச் செயலாளர்கள் நா. தங்கவேல், டவுன் பா.ஆனந்த் மற்றும் கேசவன்  இளைஞரணி தினேஷ், கராத்தே ராஜேஷ், வானவன் மணி, புயல் சரவணன்,  முகாம் குழு உறுப்பினர்கள், BLA, BDA, BLC பூத் கமிட்டி நிர்வாகிகள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments