Breaking News

விருத்தாசலம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி

 விருத்தாசலம், செப்டம்பர் 4:

விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி போதைப் பொருள் எதிர்ப்பு சங்கம் சார்பில், மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி, விருத்தாசலம் முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. “போதையில் நீ வீதியில் உன் குடும்பம்”, “போதை அழிவின் பாதை”, “போதை இல்லா உலகை உருவாக்குவோம்” போன்ற வாசகங்கள் இடம் பெற்ற பதாகைகளை மாணவர்கள் ஏந்தி முழக்கங்களுடன் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த பேரணியை விருத்தாசலம் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். உதவி ஆய்வாளர் சந்துரு மற்றும் காவல் துறையினர் இதில் பங்கேற்றனர்.



கல்லூரி முதல்வர் முனைவர் முனியன், போதைப் பொருள் எதிர்ப்பு சங்க ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் பரமசிவம் (வணிகவியல் துறை), முனைவர் சுப்பிரமணியன் (வரலாற்றுத் துறை), வரலாற்று துறை தலைவர் சுரேஷ்குமார், என்எஸ்எஸ் திட்ட அலுவலர் ஹெலன் ரூத் ஜாய்ஸ், பேராசிரியர்கள் காசிலிங்கம், இளையராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மொத்தம் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.

No comments

Thank you for your comments