உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்,காஞ்சிபுரம் ஆட்சியர் ஆய்வு
காஞ்சிபுரம், செப்.4:
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியம் மருதம் கிராமத்தில் செயல்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணையை ஆட்சியர் பார்வையிட்டு பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களிலிருந்து செடிகளின் வளர்ச்சியை கண்காணித்தல் பற்றி கேட்டறிந்தார்.
இதன் தொடர்ச்சியாக பெரியாண்டித்தாங்கல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை ஆட்சியர் பார்வையிட்டு குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை ஆய்வு செய்தார்கள்.
பின்னர் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பசுமைப்பார்வை பணியான சூரிய ஒளி விளக்குகள், சூரிய ஒளி பம்புகளை பயன் படுத்துதல், சூரிய ஒளி ஆழ்துளைக்கிணறு அமைத்தல், மழைநீர் சேமிப்பு, உரக்கிடங்குகள் அமைத்தல், காய்கறித் தோட்டம்,மூலிகைத் தோட்டம், மரங்கள் நடுதல், கழிவுநீரை மறு சுழற்சி செய்தல் போன்ற பல்வேறு பசுமை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நெகிழி இல்லா சுற்றுச்சூழலை உருவாக்கவும் கேட்டுக்கொண்டார்.
ஆட்சியரது ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொறுப்பு)அ.நளினி உள்ளிட்ட அரசு அலுவலர்களும் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments