Breaking News

வேப்பூரில் கனரா வங்கி முற்றுகை – நகை மதிப்பீட்டாளர் 20 லட்சம் பண மோசடி, தற்கொலை!

கடலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள கனரா வங்கியில் பணிபுரிந்த நகை மதிப்பீட்டாளர் சுரேஷ், வங்கிக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களிடம் ரூ.20 லட்சத்திற்கும் மேல் பணத்தைப் பெற்றுக் கொண்டு, அதை வங்கியில் வரவு வைக்காமல் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்த நிலையில் அவர் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வங்கி மேலாளர் முறையான பதில் அளிக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.




இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.



இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேட்டி அளித்தவர்கள்:

  1. முத்துலட்சுமி
  2. சிவகுமார்
  3. வளர்மதி


செய்தியாளர்: R. காமராஜ் – 📞 9080215691
ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் – 📞 8072117545








































No comments

Thank you for your comments