Breaking News

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரசு மிதிவண்டிகள் பழைய இரும்பு கடையில் துருப்பிடித்து கிடக்கும் அவலம்


 📍 விருத்தாசலம் :

ஆனால், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், தமிழக அரசால் வழங்கப்பட்ட மிதிவண்டிகள் சில பழைய இரும்பு கடையில் துருப்பிடித்து கிடக்கின்றன என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவ விவரம்

விருத்தாசலம் முனியப்பர் கோவில் அருகில் உள்ள ராமச்சந்திரன் பேட்டையில் உள்ள ஒரு பழைய இரும்பு வாங்கும் கடையில், அரசால் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட மிதிவண்டிகள் குவிந்து கிடக்கின்றன.

பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்திய மிதிவண்டிகளை இரும்பு விற்பனைக்கு கொடுத்ததால், அவை அங்கு விற்கப்படாமல் துருப்பிடித்து, உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றன.

சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பு

இந்த காட்சியை கண்ட சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவர்கள்,

பெரும் பரபரப்பு

பள்ளிக் கல்வியை மேம்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நல்ல திட்டங்களில் ஒன்றான இலவச மிதிவண்டி திட்டம் இவ்வாறு தவறாக பயன்படுத்தப்படுவது சமூகத்தில் கேள்விக்குறி எழுப்பியுள்ளது.

விருத்தாசலத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📰 செய்தியாளர்: R. காமராஜ் (9080215691)
🎥 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் (8072117545)

No comments

Thank you for your comments