Breaking News

காலாவதியான அரசு வாகனங்கள்..பாதுகாப்பற்ற அவலநிலை - காஞ்சிபுரம் ஓட்டுநர் சங்கம் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்



 காஞ்சிபுரம்:

தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர் சங்கத்தின் 28-வது மாவட்ட பொதுக்குழு கூட்டம் இன்று (21.09.2025) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் முன்னிலையில், மாவட்ட தலைவர் சிவசுப்ரமணியன் தலைமையேற்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு வாகன ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

  • அரசு வாகன மாற்றம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு துறைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பெரும்பாலும் 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்து, 100% தேய்மானம் அடைந்துள்ளன. இதனால் அதிகாரிகளும் ஓட்டுநர்களும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இவ்வாகனங்களை உடனடியாக மாற்ற வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  • பதவி உயர்வு கோரிக்கை:
அரசு ஓட்டுநர்கள் ஓய்வு பெறும் வரை ஓட்டுநராகவே பணியாற்ற வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். பலர் பட்டதாரிகள் என்பதால், அவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
  • காலிப் பணியிடங்கள்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனக் கூட்டத்தில் கோரப்பட்டது.
  • பழைய ஓய்வூதிய திட்டம்:
திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதியின்படி, பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும் என சங்கம் வலியுறுத்தியது.



சங்க வளர்ச்சி திட்டங்கள்

மேலும், 2025ஆம் ஆண்டிற்கான சங்க வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, உறுப்பினர்களின் நலனுக்கான பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

No comments

Thank you for your comments