காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கருத்தரங்கம்
காஞ்சிபுரம்,செப்.21:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சிபுரம் கிளை சார்பில் முஸ்லீம் இளைஞர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கம் அக்கிளையின் தலைவர் சாகுல்ஹமீது தலைமையில் நடைபெற்றது.
கிளையின் செயலாளர் சாகுல்ஹமீது,பொருளாளர் பாசில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில் அமைப்பின் மாணவரணி சார்பில் சுபேதார், தொண்டரணி சார்பில் இர்ஷாத் ஆகியோர் உட்பட 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments