Breaking News

வேன்கார்டு அகாடமி பள்ளியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்..!




கோவை மாவட்டம் பள்ளி மாணவர் களுக்கு உயர்தரமான கல்வி எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் துவக்கப்பட்ட டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் கீழ்  பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 



இந்நிலையில் கேம்பிரிட்ஜ் சர்வதேச பாடத்திட்டத்தை அளிக்கும் வேன்கார்டு அகாடமி என்ற பெயரில் ஒரு புதிய பள்ளி கட்டிடம் காளப்பட்டியில் துவங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி - தலைவர், கேஎம்சிஹெச் & டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை, டாக்டர் தவமணி தேவி பழனிசாமி - துணைத் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர், டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை, டாக்டர் அருண் பழனிசாமி, செயல் இயக்குனர், கேஎம்சிஹெச் ஆகியோர்  கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் மேலும் 2025 - 26 கல்வியாண்டில் சிறு குழந்தைகளுக்கான சேர்க்கை விரைவில் துவங்கும் எனவும் 2026 - 27 கல்வியாண்டில் 8-ம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெறும் எனவும் பள்ளி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments

Thank you for your comments