Breaking News

விச்சந்தாங்கல் விவசாயிகள் நெல்மூட்டைகளுடன் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

காஞ்சிபுரம்,செப்.3:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விச்சந்தாங்கல் கிராம விவசாயிகள் திமுக பிரமுகரால் நெல் கொள்முதல் நிலையம் நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி திடீரென நெல் மூட்டைகளுடன் அமர்ந்து சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விச்சந்தாங்கல் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.இக்கொள்முதல் நிலையத்தினை திமுக பிரமுகர் ஒருவர் தான் நடத்துவார் என அதிகாரிகள் விவசாயிகளிடம் கூறியதாக தெரிகிறது. 

👍சகல தோஷ நிவாரணம் தரும் அரிய தலம் – நவகிரகங்கள் தம்பதியராய் அருள்புரியும் அதிசயம்!

எனவே திமுக பிரமுகர் நெல் கொள்முதல் நிலையத்தை நடத்தக்கூடாது எனவும்அதற்கு எதிர்ப்பும் தெரிவித்து காஞ்சிபுரத்திலிருந்து உத்தரமேரூர் செல்லும் சாலையில் களக்காட்டூர் கிராமத்தில் விச்சந்தாங்கல் விவசாயிகள் நெல்மூட்டைகளுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மாகறல் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

மாகறல் காவல் நிலையத்துக்கு வந்து புகாராக எழுதிக் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

No comments

Thank you for your comments