Breaking News

பட்டியல் சமூக ஊழியரை காலில் விழவைத்த திமுக பெண் கவுன்சிலர் – சிசிடிவி காட்சி பரபரப்பு

விழுப்புரம், செப்.3:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை, தி.மு.க பெண் கவுன்சிலர் ரம்யாவின் காலில் விழ வைக்கப்பட்டதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நகராட்சி ஆணையர் அறையில் நடந்தது என்ன? சிசிடிவி காட்சியில் வெளிச்சம் :

திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரியும் முனியப்பனுக்கும், 20-வது வார்டு கவுன்சிலர் ரம்யாவுக்கும் இடையிலான வாக்குவாதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புகைப்படம்: கணவர் மரூர் ராஜாவுடன் கவுன்சிலர் ரம்யா



சுமார் 1.30 நிமிடங்கள் ஓடும் சிசிடிவி காட்சியில், ரம்யா அமர்ந்திருந்த சேரை நகர்த்தியபின், முனியப்பன் அவரது காலில் விழுந்து கதறி அழுவதை காண முடிகிறது. பின்னர் அவர் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்.

கவுன்சிலர்களின் புகார்

நகராட்சித் தலைவர் அறையில் பதிவான இந்த சிசிடிவி வீடியோ பொது வெளியில் கசிந்த நிலையில், `பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஊழியரை கட்டாயப்படுத்தி காலில் விழ வைத்த தி.மு.க கவுன்சிலர் ரம்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று 3 தி.மு.க கவுன்சிலர்கள், 2 அ.தி.மு.க கவுன்சிலர்கள் மற்றும் ஒரு வி.சி.க கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் திண்டிவனம் டி.எஸ்.பி பிரகாஷிடமும், நகராட்சி மேனேஜரிடமும் நேற்று புகாரளித்திருக்கின்றனர்.

புகாரளித்தவர்களில் ஒருவரான 22-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் ராஜலட்சுமியின் கணவர் வெற்றிவேல் கூறுகையில்,

``2021-ம் ஆண்டு தெருவிளக்கு தொடர்பான கோப்பு ஒன்றை தேடித் தரும்படி, பொறியியல் பிரிவில் இளநிலை பொறியாளராக பணியாற்றும் முனியப்பனிடம் கேட்டிருக்கிறார் ஆணையர் சரவணன்.  முனியப்பன் அந்தப் பிரிவுக்கு வந்து ஒரு வருடம்தான் இருக்கும் என்பதால், பார்த்து தேடித் தருகிறேன் என்று கூறியிருக்கிறார். 


அதையடுத்து ஆகஸ்ட் 28-ம் தேதி `அந்தக் கோப்பு என்னாச்சு?’ என, தனக்கு தொடர்பே இல்லாத கோப்பு குறித்து முனியப்பனிடம் கேட்டிருக்கிறார் 20-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் ரம்யா.  அதற்கு, `தேடித் தருகிறேன் மேடம்’ என்று அவர் சொன்னதும், ரம்யா சென்று ஆணையரை அழைத்து வருகிறார்.

அப்போது `இந்த வேலையை இவனிடம் சொன்னதுக்கு பதிலா வேறு ஒரு ஆளுகிட்ட சொல்லி இருக்கலாம்’ என்று ஒருமையில் பேசியிருக்கிறார் ரம்யா. அதையடுத்து, `மேடம் அந்த ஃபைலுக்கும் உங்களுக்கும் எந்த தொடர்புமே இல்லை. நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள். நான் அதைத் தேடி ஆணையரிடம் கொடுக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார் முனியப்பன். 

தொடர்ந்து, `நான் யார் தெரியுமா ? என்னிடமே திமிராகப் பேசுறியா’ என்று மிரட்டியிருக்கிறார் ரம்யா. அதன்பிறகு ரம்யாவின் கணவர் உள்ளிட்ட 5 பேர் வந்து, `அக்காவையே எதிர்த்துப் பேசுறியா…?’ என்று மிரட்டிவிட்டுச் சென்றதும், முனியப்பன் பயந்து விடுகிறார்.

இதையடுத்து  மறுநாள் 29-ம் தேதி, முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையரிடம் புகாரளித்தார் ரம்யா. அதனடிப்படையில் முனியப்பனை கண்டித்துவிட்டுச் சென்று விடுகிறார் ஆணையர். ஆனால் ஆணையர் அறையில் அமர்ந்து கொண்ட ரம்யா, நகராட்சித் தலைவரின் கணவர் ரவிச்சந்திரனை போன் செய்து அழைக்கிறார். அங்கு ஏற்கெனவே அலுவலக ரீதியான `ஜூம் மீட்’ நடந்து கொண்டிருந்தது.


காலில் விழுந்து கதறி அழுகிறார் :

நகராட்சி மேலாளர் பழனி, சுகாதார அலுவலர் செந்தில்குமார் மற்றும் ரம்யாவுடன் அமர்ந்து, முனியப்பனை அழைத்து மீண்டும் விசாரிக்கிறார்கள். அப்போது, `நான்தான் ஏற்கெனவே மன்னிப்பு கேட்டுவிட்டேனே?’ என்று கூறிய அவர், மீன்டும் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

அதற்கு,`வாயால் மட்டும் மன்னிப்பு கேட்டுவிட்டால் போதுமா?’ என ரம்யா கேட்டதும், ஏற்கெனவே பயந்து போயிருந்த முனியப்பன் அவரது காலில் விழுந்து கதறி அழுகிறார்.

வாயால் மன்னிப்பு கேட்டால் போதுமா என்றால், காலில் விழுங்கள் என்று சொல்வதாகத்தானே அர்த்தம் ? இத்தனை பேர் அமர்ந்து கொண்டிருந்த ஒரு அறையில், அரசு ஊழியர் ஒருவரை நிற்க வைத்துக் கொண்டு பேசியிருக்கிறார்கள். அதனால்தான் அவருக்கு ஆதரவாக நாங்கள் டி.எஸ்.பி-யிடம் புகாரளித்திருக்கிறோம்” என்றார்.

பின்னணி மற்றும் குற்றச்சாட்டு

இதற்கிடையில், முனியப்பன் தன்னுடைய இடுப்பில் கை வைத்ததாகவே ரம்யா புகார் அளித்திருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ரம்யா 2023-ல் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 2 பேர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மரூர் ராஜாவின் மனைவியாவார் என்றும், முன்னாள் அமைச்சர் மஸ்தானுக்கு நெருக்கமானவர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சமூக ஆர்வலர்களின் கேள்வி

“நகர அவைத் தலைவர் மற்றும் கவுன்சிலராக இருந்தாலும்,  ஆணையர் இல்லாத நேரத்தில் நகராட்சி அலுவலகத்தில் அதிகாரம் செலுத்தலாமா? ஒரு அரசு ஊழியரை அனைவரும் முன்னிலையில் இவ்வாறு அவமதிப்பது சரியா?” என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


For English Reader :

Villupuram Shock: Dalit Government Staff Forced to Fall at DMK Woman Councillor’s Feet in Tindivanam Municipality

Villupuram district has been shaken by an incident inside the Tindivanam Municipality office, where a Dalit government employee was allegedly forced to fall at the feet of a DMK woman councillor.

The employee, Muniyappan, works as a Junior Assistant in Tindivanam Municipality. A dispute reportedly broke out between him and Ward 20 DMK Councillor Ramya over a missing municipal file. Following heated arguments, CCTV footage surfaced showing Muniyappan breaking down and falling at Ramya’s feet inside the Commissioner’s chamber.

The video, lasting 1 minute and 30 seconds, shows Ramya moving her chair aside, after which Muniyappan kneels, hits his head, and cries at her feet. Several councillors, including Ravichandran (Ward 8, DMK), and municipal officials were present during the incident.

Subsequently, 3 DMK councillors, 2 AIADMK councillors, and 1 VCK councillor submitted complaints to the DSP and the Municipal Manager demanding strict action against Councillor Ramya.

Meanwhile, Ramya has filed a counter-complaint with the DSP, alleging that Muniyappan misbehaved and touched her inappropriately.

Social activists have questioned whether a councillor has the authority to misuse power inside a municipality office in the absence of the Commissioner. The controversy has triggered widespread debate across Villupuram district.

No comments

Thank you for your comments