Breaking News

வள்ளலார் மாத பூசத்தையொட்டி கடலூர் முருகன்குடியில் சன்மார்க்கக் கருத்தரங்கம் – பசியாற்றுவித்தல் அறப்பணி


 கடலூர், செப்டம்பர் 17, 2025

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடியில் உள்ள வள்ளலார் பணியகம் சார்பில், வள்ளலார் மாத பூசத்தையொட்டி சன்மார்க்கக் கருத்தரங்கம் மற்றும் பசியாற்றுவித்தல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு இன்று (புரட்டாசி 1, புதன்கிழமை) காலை 11.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, முருகன்குடி எம்.ஆர்.எஸ். ஈஸ்வரா வணிக வளாகத்தில் உள்ள வள்ளலார் பணியகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு வள்ளலார் பணியக பொறுப்பாளர் தங்க. பன்னீர்செல்வம் தலைமையேற்றார்.


சிறப்புத்தலைவர், நாட்டு வைத்தியர் பெரங்கியம் சிவ. வரதராஜன், திருவிளக்கு ஏற்றி வைத்து இயற்கை உணவு – இயற்கை மருத்துவம் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்க உரை ஆற்றினார்.


பசியாற்றுவித்தல் அறப்பணி கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தாழநல்லூரைச் சேர்ந்த செ. வினோத்குமார் – சசிகலா, தெய்வமணி செல்வராசு, வி. சண்முகராஜ், வி. வருண் குடும்பத்தினர் ஆகியோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

காலை 10 மணி முதல் 11 மணி வரை பாரம்பரிய மருத்துவர் பெரங்கியம் சிவ. வரதராஜன் கட்டணமில்லா மருத்துவ ஆலோசனை வழங்கினார்.


நிகழ்வை அரா. கனகசபை, ம. கனிமொழி, சு. சிலம்புச்செல்வி, எரப்பாவூர் ராமசாமி, அக்குபஞ்சர் மருத்துவர் சிவகாசி செல்வகுமார் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

இந்நிகழ்வில் சன்மார்க்க சான்றோர்கள், அன்பர்கள், பொதுமக்கள் மற்றும் பெரியவர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

📞 தொடர்புக்கு: 9443904817, 9486166318, 9787700902



📌 செய்தியாளர்: R. காமராஜ் – 📞 9080215691
📌 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் – 📞 8072117545
 

No comments

Thank you for your comments