காஞ்சிபுரத்தில் 502 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.60.21 கோடி மதிப்பில் வங்கிக்கடனுதவிகள், ஆட்சியர் வழங்கினார்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடனுதவிகள் வழங்கும் விழா ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது.எம்பி க.செல்வம்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.ஆர்த்தி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாம்மை இயக்குநர் ஆ.க.சிவமலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் மு.பிச்சாண்டி வரவேற்றார்.
விழாவில் 502 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.60.21 கோடி மதிப்பிலான வங்கிக்கடனுதவிகளை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். விழாவில் ஆட்சியர் பேசுகையில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாழும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே தமிழக மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
No comments
Thank you for your comments