Breaking News

🌴 தேவரியம்பாக்கம் ஊராட்சியில் பனை விதைகள் நடும் விழா – இந்தியன் வங்கி சுயசேவை இயக்கம் 🌴



இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் சுவக்ஷதா ஹை சேவா (தூய்மை இயக்கம்) பிரச்சாரத்தின் ஓர் பகுதியாக, வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் ஊராட்சியில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியன் வங்கி மண்டல மேலாளர் திருமதி ஸ்ரீமதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. அஜய் குமார், முன்னோடி வங்கி மேலாளர் திரு. திலீப், வாலாஜாபாத் இந்தியன் வங்கி கிளை மேலாளர் திருமதி கீதா ராணி மற்றும் இந்தியன் வங்கியின் வணிக தொடர்பாளர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நடும் பணியை வழிநடத்தினர்.

இந்தியன் வங்கி, சுய உதவிக் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து, 200க்கும் மேற்பட்ட பனை விதைகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.

No comments

Thank you for your comments