விருத்தாசலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார்
விருத்தாசலம் | 13 செப்டம்பர் 2025
இந்த நிகழ்வில், 430 பயனாளிகளுக்கு ரூ.91.77 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முதலமைச்சரின் திட்டங்களை அமைச்சர் வலியுறுத்தினார்
அமைச்சர் தனது உரையில்:
- பொதுமக்களின் வாழ்வாதாரம் மேம்பட,
- அடிப்படை வசதிகள் வலுப்பெற,
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மகளிர் விடியல் பயணம், தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.
மேலும், பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகளை, மக்கள் வசிக்கும் இடத்திலேயே வழங்குவதற்காக, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் 15.07.2025 அன்று சிதம்பரத்தில் முதலமைச்சர் துவக்கி வைத்ததாக தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் முகாம்கள் நிலவரம் :
மொத்தம் 378 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.- நகர்புறம் – 130
- ஊரகம் – 248
இதுவரை 222 முகாம்கள் நடத்தப்பட்டு,
- 79,356 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
- அதில் 20,725 மனுக்கள் தீர்வு கண்டுள்ளன.
- மகளிர் உரிமைத் தொகைக்கு மட்டும் 54,685 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த முகாம்களில்:
- நகர்புறத்தில் 13 துறைகளின் 43 சேவைகள்
- ஊரகப் பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகள் வழங்கப்படுகின்றன.
இ-சேவை வசதிகள் உடனடியாக வழங்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்து தகுதி அடிப்படையில் பரிசீலித்து தீர்வு செய்யப்படும்.
இன்றைய தின நலத்திட்ட உதவிகள் :
➡️ மொத்தம்: 430 பயனாளிகள் – ₹91,77,560 மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.
கலந்து கொண்டோர் :
- துணை ஆட்சியர் முத்திரைத்தாள் தனலட்சுமி
- விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுப்பிரியா
- பல துறை அலுவலர்கள்
No comments
Thank you for your comments