திட்டக்குடி அருகே பெண்ணாடத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – அமைச்சர் சி.வெ.கணேசன் பணி நியமன ஆணைகள் வழங்கினார்
விருத்தாசலம் | 13 செப்டம்பர் 2025
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சி. பி. ஆதித்யா செந்தில்குமார் தலைமையேற்றார்.
மாநில பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் ஆனந்த், லோட்டஸ் பள்ளி இயக்குநர் பார்வதி ஹரி கிருஷ்ணன், முதல்வர் ப்ரியா துரைராஜ், பெண்ணாடம் பேரூராட்சி தலைவர் அமுதலட்சுமி, துணைத் தலைவர் குமரவேல், செயல் அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மண்டல இயக்குநர் அருணகிரி வரவேற்புரை ஆற்றினார்.
🌸 “திருமணத் தடைகள் நீங்கும் தெய்வீக திருத்தலம்”
🌺 “தோஷங்களைத் தீர்த்து, தம்பத்ய வாழ்வைத் தரும் தலமாம்...”
அமைச்சர் சி.வெ. கணேசன் உரை
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் குறிப்பிட்டதாவது:
- இந்திய அளவில் பெண்கள் வேலைவாய்ப்பில் அதிக சதவீதம் பங்கெடுத்து வரும் மாநிலம் தமிழகம் (43%).
- மாநிலம் முழுவதும் 343 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 2.75 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
- இந்த எண்ணிக்கையை 3 லட்சமாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
- இளைஞர்கள் முன்னேற, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, நோக்கம், குறிக்கோள் ஆகியவை அவசியம்.
- தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதல்வர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
முகாம் மற்றும் வேலைவாய்ப்பு நிலவரம்
இந்த முகாமில் 136 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.
பணி நியமனத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களுக்கு அமைச்சர் நேரடியாக நியமன ஆணைகளை வழங்கினார்.
கலந்து கொண்டோர்:
- 8ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல்,
- கலை & அறிவியல், நர்சிங், வணிக பட்டதாரிகள்,
- ஐடிஐ, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகள் வரை பல்வேறு துறையைச் சேர்ந்த இளைஞர்கள்
அனைவரும் தங்களின் கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை, சுயவிவரக் குறிப்புகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் பதிவு செய்து கலந்து கொண்டனர்.
பிற முக்கிய கலந்து கொண்டோர்
- ஒன்றிய பொறுப்பாளர் செம்பியன்
- மாவட்ட பிரதிநிதி கமால் பாஷா
- சோழன்நகர் முருகவேல்
- கவுன்சிலர்கள் அனந்த ராமகிருஷ்ணன், சரண்ராஜ்
- பலர்
முகாம் நிறைவில், மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் பாலமுருகன் நன்றியுரை ஆற்றினார்.
📸 செய்தியாளர்: R. காமராஜ் – 9080215691
🎥 ஒளிப்பதிவாளர்: V. வேல்முருகன் – 8072117545
No comments
Thank you for your comments