Breaking News

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல் – நண்பர்கள் இருவர் பலி


 காஞ்சிபுரம், செப்டம்பர் 15:

காஞ்சிபுரம் – வையாவூர் சாலையில் நடந்த சாலை விபத்தில், நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெரியகாஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஹரீஷ் (22) என்ற இளைஞர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று மாலை அவர் தனது நண்பர்களான நிர்மல் (21), சந்தோஷ் (21) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் வையாவூரிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்தார்.

அப்போது, முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது, எதிர்புறம் வந்த வெங்கடேசன் என்ற நபர் ஓட்டி வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் ஹரீஷ் லாரி பக்கவாட்டில் தள்ளி விழுந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த நிர்மல் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.



இதில், ஹரீஷின் நண்பர் சந்தோஷ் மற்றும் எதிர் புற வாகன ஓட்டுனர் வெங்கடேசன் ஆகிய இருவரும் கடுமையாக காயமடைந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு, இணைபிரியா நண்பர்களாக இருந்த ஹரீஷ் மற்றும் நிர்மல் விபத்தில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





No comments

Thank you for your comments