📌 காஞ்சிபுரத்தில் மல்லை சத்யா ஆதரவாளர்களின் இயக்க கொடி அறிமுக விழா | Mallai Sathya New Movement Flag Launch Kanchipuram
காஞ்சிபுரம், செப்.15:
இந்நிகழ்ச்சி முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாள் விழா, இயக்க முன்னோடிகளுக்கு திராவிட ரத்னா விருதுகள் வழங்கும் விழா மற்றும் இயக்க கொடி அறிமுக விழா என முப்பெரும் நிகழ்வுகளாக நடைபெற்றது.
📍 காலை அமர்வுக்கு ராமேசுவரத்தை சேர்ந்த கராத்தே பழனிச்சாமி தலைமை வகித்தார்.
முன்னதாக, காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் மல்லை சத்யா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் முன்புள்ள அண்ணா சிலைக்கும் மாலை அணிவித்து ஊர்வலமாக கூட்டம் நடைபெற்றது.
அத்துடன், இயக்க நிர்வாகிகளாக 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், வரும் நவம்பர் 20 ஆம் தேதி — நீதிக்கட்சி உருவான நாளன்று — அந்நாள் கூட்டத்தில் இயக்கம் கட்சியா அல்லது அமைப்பா என்பதும், அதன் பெயரும் நிர்வாகிகளின் பட்டியலும் அறிவிக்கப்படும் என மல்லை சத்யா தெரிவித்தார்.
நிறைவாக, காஞ்சிபுரம் மாநகர செயலாளர் வி.வெங்கடேசன் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் மதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments